Saturday, October 15, 2016

முன்னால் மாணவர்கள் அமைப்பு கட்டு நாடு நண்பர்கள்

சுண்டக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி 

முன்னால் மாணவர்கள் (சமூகநல கட்டுநாடு ) அமைப்பு (சுண்டக்குடி School Ex-Students Association)
*நமது முன்னால் மாணவர்கள் (சமூகநல) அமைப்பின் முதன்மையான நோக்கங்கள் மற்றும் திட்டங்கள்:
*கல்வி ஊக்கத் தொகை, புத்தகங்கள், பரிசுகள், பதக்கங்கள், கணினி மற்றும் ஏனைய படிப்பு சம்பந்தமான உதவிகளை வழங்குவது.
*பள்ளிகளுக்கு தொடுதிரை மதி வகுப்பறை (Touch screen based smart class) அமைத்து தருவதற்கு ஏற்பாடு செய்வது.
*பள்ளிகள், நூலகங்கள், ஆகியவற்றுக்கான நிதி உதவி வழங்குவதன் மூலம் மாணவர்களின் பயன்பாட்டுக்கும்,கல்வி மேம்பாட்டுக்கும் வழி வகுப்பது
*கிராமப்புற மாணவர்களுக்கு கற்பித்தல், விளையாட்டு மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு குறித்து அறிந்துகொள்வதில் உதவுவது.
*பள்ளிக்கும், மாணவர்களுக்கும் பயனுள்ள கல்வி சம்பந்தமான எழுத்துக்களை அச்சிடுதல், பதிப்பித்தல்.
*பள்ளியின் அனைத்துவிதமான முக்கிய நிகழ்வுகளை புகைப்படங்கள், கானொளிகள் மூலம் பதிவு செய்து ஆவனபடுத்துதல்.
*பள்ளியின் வளர்ச்சி செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகளில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உதவுவது.
*கிராமத்தின் நீர் மேலாண்மை மற்றும் சுற்றுச் சூழல் பேணுவது தொடர்பான விழிப்புணர்வு உருவாக்கும் வகையில் செயல்படுதல்.
*கிராமத்தில் அமைந்திருக்கும் குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளைத் தூர் வாருதல், மழை நீர் சேமிப்பு, மண் அரிப்பைத் தடுப்பது உள்ளிட்ட செயல்களை மேற்கொள்ளுதல், அவற்றுக்கு துணை நிற்பது மற்றும் நிதி உதவி வழங்குவது.
*மரம் நடுவது மற்றும் பராமரிப்பது தொடர்பான செயல்களுக்கு உதவி செய்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது.
*நமது மாணவர்கள் அமைப்பின் மூலம் கிராம இளைஞர்களை முன்மாதிரி இளைஞர்களாக உருவாக்குதல்.
*நமது கிராம மாணவர்களுக்கு தரமான ஆரம்பக்கல்வியை வழங்குதல்.
*நூலகம் அமைத்தல் & சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துதல்.
*விளையாட்டு மைதானம் அமைக்க உதவுதல். உடற்பயிற்சிக்கூடம் அமைத்து அதற்கென பிரத்யேக பயிற்சியாளரை நியமித்தல்.
*ஊராட்சி மன்றத்தின் செயல்படாத பணிகளுக்காக குரலெழுப்புதல்.
*தகவலறியும் உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
*கிராமபுற மக்களுக்கு விவசாயம் குறித்த செயல்பாடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் கிராம வளர்ச்சிக்கு வித்திடும் அனைத்து செயல்பாடுகளுக்கும் உதவியாய் இருப்பது.
”முயற்சி விதைபோல அதை விதைத்துக் கொண்டே இரு.
முளைத்தால் மரம், இல்லையென்றால்- அது மண்ணிற்கு
உரம்.” - கோ. நம்மாழ்வார்
''தொடர்ந்து செயல்படுவோம். செய்வதையெல்லாம் செய்து கொண்டேயிருப்போம். எங்கேயாவது பலன்கள் அறுவடை ஆகிக் கொண்டேயிருக்கட்டும்!''
'இது தற்பெருமையோ அல்லது சுயவிளம்பரம் தேடும் வணிகமோ அல்ல. ஒரு தீக்குச்சியின் கனநேரச்சுடர் அணைவதற்குள் சில விளக்குகளை ஏற்றிவிடத் துடிக்கும் ஜுவாலையின் தவிப்புதான் நமது மாணவ சமூகநல அமைப்பின் நோக்கமாகும். நன்றி!'

Regards,
சுண்டக்குடி School Ex-Students Association
அரசு மேல்நிலைப்பள்ளி
முன்னால் மாணவர்கள் அமைப்பு கட்டு நாடு நண்பர்கள்
Received from Vallakkulam Sathis

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More