Sunday, October 18, 2015

திருமானூர் அருகே ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரின் வீட்டில் நகை –பணம் கொள்ளை

திருமானூர் அருகே ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரின் வீட்டில் நகைபணம் கொள்ளை

 

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள விழுப்பனங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராமானுஜம். விழுப்பனங்குறிச்சி ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர். இவரது மகள் வனிதா. இவர் தஞ்சாவூர் யூனியன் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு கார்த்திகை மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

 

மகள் திருமணத்திற்கான நகைபணத்தை ஏற்பாடு செய்த ராமானுஜம் அதனை பீரோவில் வைத்திருந்தார். இந்நிலையில் நேற்றிரவு அவர் வீட்டை பூட்டி விட்டு மனைவி, மகளுடன் தூங்கினார். இன்று காலை எழுந்து பார்த்த போது பின்பக்க கதவு திறந்து கிடந்தது. மேலும் பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. அதனை பார்த்த போது அதில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த 16½ பவுன் நகை மற்றும் ரூ.1ž லட்சம் பணம் கொள்ளை போயிருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும்.

 

இது குறித்து திருமானூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். நேற்றிரவு ராமானுஜம் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருக்கும் போது மர்மநபர்கள் உள்ளே புகுந்து தங்கள் கைவரிசையை காட்டியுள்ளது தெரியவந்தது. சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டது.

 

கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Nandri :

http://www.maalaimalar.com/2015/10/17163608/local-council-ex-leader-house.html

 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More