Friday, October 23, 2015

"மழை வெள்ள பாதிப்பு குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்'

"மழை வெள்ள பாதிப்பு குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்'

அரியலூர் மாவட்டத்தில் மழை வெள்ளதால் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் . சரவணவேல்ராஜ். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை காரணமாக மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும்போது, உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் தொடர்பு கொள்ளவும், தகவல் தெரிவிக்கவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது.

மேலும், அரியலூர் சார் ஆட்சியர் அலுவலகம், உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகம், அரியலூர், செந்துறை மற்றும் ஜயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகங்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறை எண்- 1077, அலுவலக எண்- 04329-228151, சார் ஆட்சியர் அலுவலகம் 04329-245352, 9445000459, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், உடையார்பாளையம் 04331-245352, 9445000460, வட்டாட்சியர் அலுவலகம், அரியலூர் 04329-222062, 9445000613, வட்டாட்சியர் அலுவலகம், செந்துறை 04329-242320, 9445000615, வட்டாட்சியர் அலுவலகம், ஜயங்கொண்டம் 04331-250220, 9445000614 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும், மழை வெள்ளம் காரணமாக எந்நேரமும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் தங்களது கிராமங்களிலும், தலைமையிடத்திலும் இருந்து கவனிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரியலூர், ஜயங்கொண்டம், செந்துறை ஆகிய வட்டாட்சியர்களும், காவல் துறையினரும் தொடர் ரோந்துப் பணி மேற்கொள்வார்கள்.

தீயணைப்பு அலுவலர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அரியலூர் அரசு மருத்துவமனையிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சுழற்சி முறையில் மருத்துவர்களும், அலுவலர்களும் பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More