Saturday, October 17, 2015

அரியலூர் மாவட்டத்தில் 47 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி, சேலைகள்

அரியலூர் மாவட்டத்தில் 47 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி, சேலைகள்

By அரியலூர்

First Published : 18 October 2015 04:30 AM IST

அரியலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதியோர் உதவித்தொகை பெறும் 47 ஆயிரத்து 209 பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ். 

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், இலந்தைகூடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வருவாய்த் துறை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதியோர்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை அண்மையில் வழங்கி அவர் மேலும் பேசியது:

 தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் முதியோர் உதவித்தொகை பெறுவோர் அனைவருக்கும் தீபாவளி பண்டிகைக்குள் இலவச வேட்டி, சேலை வழங்க அறிவுறுத்தியுள்ளார். அதன்படி அரியலூர் மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளில் 30,027 சேலையும், 17,182 வேட்டியும் என மொத்தம் 47,209 பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக இலந்தைக்கூடம் ஊராட்சிக்குள்பட்ட 102 பயனாளிகளுக்கு இலவச வேட்டிகளும், 262 பயனாளிகளுக்கு இலவச சேலைகளும் என மொத்தம் 364 பயனாளிகளுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

விழாவில் அரியலூர் சட்டப்பேரவை உறுப்பினர் துரை.மணிவேல், அரியலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமரை.எஸ்.  ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் பா. ரவீந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் பூமி, ஒன்றியக் குழுத் தலைவர் சீனிவாசன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More